Info Sri Lanka : Tamil - இன்போ ஸ்ரீ லங்கா : தமிழ்

நேற்று 11 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 835

நேற்று 11 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 835-11 More COVID19 Cases Identified-Total Up To 835

– நேற்று அடையாளம் காணப்பட்ட 11 பேரும் வெலிசறை முகாமைச் சேர்ந்த 11 கடற்படையினர்
– நேற்று 2 கடற்படையினர் உள்ளிட்ட 8 பேர் குணமடைவு
– இது வரை 16 கடற்படையினர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று (08) இரவு 11.45 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 824 இலிருந்து 835 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய நேற்றையதினம் (08) கொரோனா வைரஸ் தொற்றிய 11 பேர் அடையாளம் காணப்பட்டதோடு, அவர்கள் அனைவரும் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அத்துடன் 08 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் 02 கடற்படை வீரர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இது வரை 16 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 835 பேரில் தற்போது 586 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 240 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 09 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 135 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் – 835
குணமடைவு – 240

நேற்று அடையாளம் – 11

நேற்று குணமடைவு – 08
சிகிச்சையில் – 575
மரணம் – 09

Image may contain: text

No photo description available.

85%

மரணமடைந்தவர்கள் – 09
மே 05 – ஒருவர் (09)
மே 04 – ஒருவர் (08)
ஏப்ரல் 08 – ஒருவர் (07)
ஏப்ரல் 07 – ஒருவர் (06)
ஏப்ரல் 04 – ஒருவர் (05)
ஏப்ரல் 02 – ஒருவர் (04)
ஏப்ரல் 01 – ஒருவர் (03)
மார்ச் 30 – ஒருவர் (02)
மார்ச் 28 – ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் – 240
மே 08 – 08 பேர் (240)
மே 07 – 17 பேர் (232)
மே 06 – 02 பேர் (215)
மே 05 – 19 பேர் (213)
மே 04 – 10 பேர் (194)
மே 03 – 12 பேர் (184)
மே 02 – 10 பேர் (172)
மே 01 – 08 பேர் (162)
ஏப்ரல் 30 – 18 பேர் (154)
ஏப்ரல் 29 – 02 பேர் (136)
ஏப்ரல் 28 – 08 பேர் (134)
ஏப்ரல் 27 – 06 பேர் (126)
ஏப்ரல் 26 – 02 பேர் (120)
ஏப்ரல் 25 – 09 பேர் (118)
ஏப்ரல் 24 – 02 பேர் (109)
ஏப்ரல் 23 – 02 பேர் (107)
ஏப்ரல் 22 – 03 பேர் (105)
ஏப்ரல் 21 – 04 பேர் (102)
ஏப்ரல் 20 – 02 பேர் (98)
ஏப்ரல் 19 – 10 பேர் (96)
ஏப்ரல் 18 – 09 பேர் (86)
ஏப்ரல் 17 – 09 பேர் (77)
ஏப்ரல் 16 – 05 பேர் (68)
ஏப்ரல் 15 – 02 பேர் (63)
ஏப்ரல் 14 – 05 பேர் (61)
ஏப்ரல் 13 – 00 பேர் (56)
ஏப்ரல் 12 – 02 பேர் (56)
ஏப்ரல் 11 – 00 பேர் (54)
ஏப்ரல் 10 – 05 பேர் (54) 
ஏப்ரல் 09 – 05 பேர் (49)
ஏப்ரல் 08 – 02 பேர் (44)
ஏப்ரல் 07 – 04 பேர் (42)
ஏப்ரல் 06 – 05 பேர் (38)
ஏப்ரல் 05 – 06 பேர் (33)
ஏப்ரல் 04 – 03 பேர் (27)
ஏப்ரல் 03 – 03 பேர் (24)
ஏப்ரல் 02 – 00 பேர் (21)
ஏப்ரல் 01 – 04 பேர் (21)
மார்ச் 31 – 03 பேர் (17)
மார்ச் 30 – 03 பேர் (14)
மார்ச் 29 – 02 பேர் (11)
மார்ச் 28 – 02 பேர் (09)
மார்ச் 27 – ஒருவர் (07)
மார்ச் 26 – 03 பேர் (06)
மார்ச் 25 – ஒருவர் (03)
மார்ச் 24 – 00 பேர் (02)
மார்ச் 23 – ஒருவர் (02)
பெப் 19 – 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை – 835
மே 08 – 11 பேர் (835)
மே 07 – 27 பேர் (824)
மே 06 – 29 பேர் (797)
மே 05 – 16 பேர் (768)
மே 04 – 37 பேர் (755)
மே 03 – 13 பேர் (718)
மே 02 – 15 பேர் (705)
மே 01 – 25 பேர் (690)
ஏப்ரல் 30 – 16 பேர் (665)
ஏப்ரல் 29 – 30 பேர் (649)
ஏப்ரல் 28 – 31 பேர் (619)
ஏப்ரல் 27 – 65 பேர் (588)
ஏப்ரல் 26 – 63 பேர் (523)
ஏப்ரல் 25 – 40 பேர் (460)
ஏப்ரல் 24 – 52 பேர் (420)
ஏப்ரல் 23 – 38 பேர் (368)
ஏப்ரல் 22 – 20 பேர் (330)
ஏப்ரல் 21 – 06 பேர் (310)
ஏப்ரல் 20 – 33 பேர் (304)
ஏப்ரல் 19 – 17 பேர் (271)
ஏப்ரல் 18 – 10 பேர் (254)
ஏப்ரல் 17 – 06 பேர் (244)
ஏப்ரல் 16 – 00 பேர் (238)
ஏப்ரல் 15 – 05 பேர் (238)
ஏப்ரல் 14 – 15 பேர் (233)
ஏப்ரல் 13 – 08 பேர் (218)
ஏப்ரல் 12 – 11 பேர் (210)
ஏப்ரல் 11 – 02 பேர் (199)
ஏப்ரல் 10 – 07 பேர் (197)
ஏப்ரல் 09 – ஒருவர் (190)
ஏப்ரல் 08 – 04 பேர் (189)
ஏப்ரல் 07 – 06 பேர் (186)
ஏப்ரல் 06 – 04 பேர் (180)
ஏப்ரல் 05 – 10 பேர் (176)
ஏப்ரல் 04 – 07 பேர் (166)
ஏப்ரல் 03 – 08 பேர் (159)
ஏப்ரல் 02 – 03 பேர் (151)
ஏப்ரல் 01 – 05 பேர் (148)
மார்ச் 31 – 21 பேர் (143)
மார்ச் 30 – 02 பேர் (122)
மார்ச் 29 – 05 பேர் (120)
மார்ச் 28 – 09 பேர் (115)
மார்ச் 27 – 00 பேர் (106)
மார்ச் 26 – 04 பேர் (106)
மார்ச் 25 – 00 பேர் (102)
மார்ச் 24 – 05 பேர் (102)
மார்ச் 23 – 10 பேர் (97)
மார்ச் 22 – 09 பேர் (87)
மார்ச் 21 – 06 பேர் (78)
மார்ச் 20 – 06 பேர் (72)
மார்ச் 19 – 12 பேர் (66)
மார்ச் 18 – 11 பேர் (53)
மார்ச் 17 – 13 பேர் (42)
மார்ச் 16 – 10 பேர் (29)
மார்ச் 15 – 08 பேர் (19)
மார்ச் 14 – 05 பேர் (11)
மார்ச் 13 – 02 பேர் (06)
மார்ச் 12 – 02 பேர் (04)
மார்ச் 11 – ஒருவர் (02)
ஜனவரி 01 – ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்

Sat, 05/09/2020 – 08:25

from tkn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *